‘கபாலி’ திரைப்படம் அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 460 தியேட்டர்களில் வெளியானது.
வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக நேற்று பல தியேட்டர்களில் அங்கு பிரிமீயர் காட்சிகள் நடைபெற்றன.
பிரிமீயர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்கப்பட்டன. நேற்றைய பிரிமீயர் காட்சிகளின் மூலம் மட்டும் 20 லட்சம் யுஎஸ் டாலர் வசூலானதாக படத்தை வெளியிட்ட சினி கேலக்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் சில தியேட்டர்களின் வசூல் விவரம் வரவேண்டியிருக்கிறதாம்.
20 லட்சம் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 13 கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும்.
இதன் மூலம் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களின் பிரிமீயர் வசூல் சாதனையை ‘கபாலி’ படம் முறியடித்துள்ளது. இன்னும் இன்றும், நாளையும், நாளை மறுநாளும் வசூலாகும் தொகையையும் கணக்கிட்டால் அமெரிக்காவில் ‘கபாலி’ பட வசூல் புதிய சாதனையைப் படைக்கும் என்கிறார்கள்.