தமிழ் சினிமாவில் புத்தம் புதிய படங்கள், அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது ஒரு ‘இமேஜ்’ சார்ந்த விஷயமாக இருந்தது.
அது ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்குத்தான் அதிகமாக இருந்தது. கடந்த சில வருடங்களாக அவர்களது படங்களின் அதிகாலைக் காட்சிகள் என்றால் டிக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது.
அதிகாலை காட்சி திரையிடப்பட்டுவிட்டால் நாமும் அவர்களைப் போல ஸ்டார் ஆகிவிடலாம் என நினைத்து சில நடிகர்கள் அவர்களது படங்களையும் அதிகாலைக் காட்சி திரையிட ஏற்பாடு செய்கிறார்கள்.
அந்த வரிசையில் நகைச்சுவை நடிகராக இருந்து, ‘எல்கேஜி’ படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்துள்ள ஆர்ஜே பாலாஜியின் ‘எல்கேஜி’ படத்திற்கு அதிகாலை காட்சி 5 மணிக்கு என சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டிவிட்டரில் பரப்புரை செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதிகாலை 5 மணிக்கு காட்சி என பிரமோஷன் செய்யப்பட்டது. அதைப் பார்த்ததும் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் ஒரு டிவீட் போட்டார்.
அதில், “அதிகாலை 5 மணி காட்சிகள் அதன் மதிப்பை இழந்து வருகின்றன. அது இப்போது ஒரு தந்திரமாக ஆகி வருகிறது,” என்று போட்டிருந்தார். அது ‘எல்கேஜி’ படத்தைத்தான் குறிக்கிறது என்பதை அதன் நாயகன் பாலாஜியே பதிலளித்து காட்டிக் கொடுத்துவிட்டார்.
அவர் பதிவிட்ட டிவீட்டில், “இந்த 5 மணி காட்சி ஒரு தந்திரம் என நான் நினைத்தால், அப்புறம் தியேட்டர் ஓனர் கிட்ட டைரக்டா கேட்டு கன்பர்ம் பண்ணிக்கிட்டேன். நாங்கள் ரெகமேண்டேஷன் சீட் வாங்கவில்லை, மெரிட் சீட்டுதான் வாங்கியிருக்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார்.
அதோடு, ஒரு வாட்சப் சாட்டிங்கையும் பதிவிட்டிருக்கிறார். அது விஷ்ணு விஷாலுடன் நடந்ததாகத்தான் இருக்கும்.
அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலும் கடுமையாக சில டிவீட்டுகளைப் பதிவிட்டு கடைசியா, “சிறிய படங்களுக்கு அதிகாலைக் காட்சிகள் கிடைப்பது மகிழ்ச்சியே. அது சினிமாவுக்கு நல்லதுதான். ஆனால், சிலர் ஆக்கபூர்வமான விமர்சனம் என்ற பெயரில் மக்களைத் தவறாக வழி நடத்துவது எனக்கு மகிழ்ச்சியானது அல்ல,” என கூறியிருக்கிறார்.
விஷ்ணு விஷாலை எப்போதோ ஒரு முறை ஆர்.ஜே. பாலாஜி கிண்டலடித்து விமர்சனம் செய்திருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் விஷ்ணு விஷால் இன்று டிவிட்டரில் சண்டை போட்டிருக்கிறார் போலிருக்கிறது. அதற்கு கீழே உள்ள அவருடைய டிவிட்டர் பதிவு மூலம் புரியலாம்.
https://twitter.com/TheVishnuVishal/status/1097767699873030144