தீபாவளிக்கு ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் ?

கமல்ஹாசன், பூஜா குமார், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் பல தடைகளைக் கடந்து 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் வெளியானது.

அந்த வருடக் கடைசிக்குள் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், படத்தைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் கமல்ஹாசனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக கோலிவுட்டில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

அதை உண்மை என்று நிரூபிக்கும் விதத்தில் மூன்று வருடங்களாகியும் இன்னும் பாகம் எப்போது வெளிவரும் என்ற தகவல் இல்லாமல் இருந்தது.

கமல்ஹாசன் காலில் அடிபட்டு மருத்துமனை சிகிச்சையில் இருப்பதால் அவர் தற்போது இயக்கி நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தை இந்த ஆண்டு வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் கமல்ஹாசன் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகளை மருத்துமனையில் இருந்தே பார்க்க ஆரம்பித்துவிட்டாராம்.

படத்தைத் தயாரித்துள்ள ஆஸ்கர் நிறுவனத்திடமிருந்து படத்தைப் பெற்று, ‘சபாஷ் நாயுடு’ படத்தைத் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் மூலம் வெளியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Read Previous

Junior Superstars on Zee Tamil on 6th August

Read Next

Tamilselvanum Thaniyar Anjalum on 5th August