‘மீண்டும் ஒரு காதல் கதை’ மலையாள வெற்றியை மிஞ்சுமா ?

‘யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் ஒரு ரீமேக்குடன் களம் இறங்கியுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்து மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தட்டத்தின் மறையத்து’ படத்தைத்தான் இந்த முறை அவர் ரீமேக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் புதுமுகம் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார், அர்ஜுனன், வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் இன்று வெளியாவதாக இருந்தது, ஆனால், படத்தைப் பார்த்தவர்கள் கொஞ்சம் இடைவெளி விட்டு, சரியான சமயத்தில் படத்தை வெளியிட்டால் அது படத்திற்கு பலமாக இருக்கும் என சொல்லவே வெளியீட்டை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது அறிமுக நாயகன் வால்டருக்கும் இஷா தல்வாருக்கும் இடையிலே திரையில் நல்லதொரு ‘காதல் கெமிஸ்ட்ரி’ தெரிகிறது. பொதுவாக காதல் படங்களில் அதுதான் ரொம்ப முக்கியம். அது இந்தப் படத்தில் சரியாக அமைந்துள்ளதாகவே தோன்றுகிறது.

மலையாளப் படத்தை அப்படியே எடுக்காமல் தமிழுக்கு ஏற்றபடி நிறைய மாற்றங்களுடன் படத்தை எடுத்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குனர் மித்ரன்.

மலையாளத்தில் ‘தட்டத்தின் மறையத்து’ படத்திற்குக் கிடைத்த வெற்றியை இந்தப் படம் மிஞ்சுமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

Read Previous

Nayanthara’s new avatar

Read Next

Simba – Pinjula Pinjula Song with Lyrics

Most Popular