‘அச்சம் என்பது மடமையடா’ – செப்டம்பர் 9 ரிலீஸ்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படத்தின் இயக்குனர் கௌதம் தெரிவித்துள்ளார்.

‘இன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து படம் வெளியாகும். தற்போதுதான் அனைத்து வேலைகளையும் முடித்தேன். அறிவிப்புக்காக காத்திருந்தோம். அனைத்தும் தயாராக உள்ளது,” எனக் கூறியுள்ளார்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு கௌதம் – ரகுமான் – சிம்பு மீண்டும் இணையும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.

படம் முடிவடைந்த நிலையில் ஒரே ஒரு பாடலை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் கௌதமுக்கும், சிம்புவுக்கும் மோதல் ஏற்பட்டது.

இருந்தாலும் இன்று கௌதம் படத்தின் வெளியீடு பற்றி அறிவித்துள்ளார்.

Read Previous

Kavalai Vendam ready for release

Read Next

ஜி.வி.பிரகாஷ் படத்தில் சரத்குமார்