‘ராக்கி’ – துப்பறியும் நாயின் சாகசம்

பிஎம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கேசி பொக்காடியா இயக்கத்தில், பப்பி லஹரி, சரண் அர்ஜுன் இசையமைப்பில், ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம், சாயாஷி ஷிண்டே, கராத்தே ராஜா, ரமேஷ் ஆகியோருடன் ராக்கி என்ற நாய் ஒன்றும் நடிக்கும் படம் ‘ராக்கி’.

சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள்.

ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார்.

போலீஸ் கமிஷனர் செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.

எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப்பில் அடைக்கிறார்.

சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு, லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப் போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது.

எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் நால்வரும் கூட்டுச் சதி செய்து சந்தோஷைக்
கொலை செய்துவிடுகின்றனர்.

இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் இருவரும் கமிஷனர் செல்வத்திடம், சந்தோஷைக் கொலை செய்தது யாரென்று தெரியவில்லை என்று பொய் சொல்கின்றனர்.

ஆனால், ராக்கி சந்தோஷைக் கொலை செய்த எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர், ராஜா, சேகர் ஆகிய நால்வரையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகிறது.

Read Previous

யோகி பாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ – டீசர்

Read Next

ராக்கி – The Revenge – டீசர்