‘முன்னோடி’ படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம்

“விண்ணைத் தாண்டி வருவாயா, அழகா் சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபா் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே, கயல், மாப்பிள்ளை சிங்கம், கொடி” போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த, தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​ நிறுவனம் ஸ்வஸ்திக் சினி விஷன் தயாரிப்பில் உருவான ​‘முன்னோடி’ படத்தை வெளியிடுகிறது.

“சமீபத்தில் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், சினிமாவில் நம்மால் யாருக்காவது உதவ முடியுமா என்ற நோக்கோடும் என் தனிப்பட்ட தயாரிப்புகளுக்கு நடுவேயும், சில படங்களைப் பார்த்து வெளியிட்டு வருகிறோம்.

அப்படி ‘முன்னோடி’ படத்தையும் பார்க்க நோ்ந்தது. மிக மிக நோ்த்தியாகவும், அதிரடியாகவும் விறுவிறுப்பான படத்தை எடுத்திருந்தார் புதுமுக இயக்குநா் குமார்.

‘ரேணிகுண்டா’ படத்தைப் போன்ற களத்தில் மிக அழமான கதையுடன் மிரட்டியிருந்தார். சமீபத்தில் வெளியிடுவதற்காக நான் பார்த்தது 100 படங்களுக்கு மேல் இருக்கும். அதில் என்னை பாதித்தது ‘முன்னோடி’ படம் என்று சொல்லலாம்.

யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இவ்வளவு அழகான படத்தை எடுத்ததற்கு கட்டிப்பிடித்து எனது வாழ்த்தை தெரிவித்த கையுடன் மறுநாளே படத்தை நானே வெளியிடுகிறேன் என ஒப்பந்தம் செய்து கொண்டேன். எல்லோருக்கும் பிடித்த படமாக நிச்சயம் ‘முன்னோடி’ இருக்கும் என்கிறார் எஸ்கேஸ்ப் ஆர்ட்டிஸ்ட் மதன்.

ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர். ‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சித்தாரா, ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைக்கிறார் கே.பிரபு ஷங்கர்.

Read Previous

Bairavaa – Review

Read Next

Jaya Tv 2017 Pongal special programmes and movies