ரஜினிகாந்த் ரசித்துப் பார்த்த ‘எமன்’

படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகராக விஜய் ஆண்டனி இருக்கிறார்.

அவர் நடித்து கடந்த வாரம் வெளிவந்துள்ள ‘எமன்’ படத்தில் சாதாரண இளைஞராக இருந்து அமைச்சராக உயரும் தமிழரசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

முழு ஆண்டு பரீட்சை இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ள நிலையிலும் கடந்த வாரம் 24ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

படம் வெளியான மூன்று நாட்களில் சுமார் 8 கோடி ரூபாய் வரை படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘எமன்’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பிரம்மாண்டமான ‘2.0’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் ‘எமன்’ படத்தை அவருடைய வீட்டில் உள்ள தியேட்டரில் படத்தைப் பார்த்துள்ளார்.

‘எமன்’ படம் நன்றாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

‘எமன்’ படத்திற்கு தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே நல்ல வரவேற்பு இருப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ள விஜய் ஆண்டனி, அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலேயே நடிக்க முடிவு செய்துள்ளார்.

Read Previous

465 – Movie Official Teaser

Read Next

நம்மை இயக்குவதே பெண்கள்தான் – இயக்குனர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Most Popular