‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ரஜினிகாந்த் பாராட்டு

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ரானி, கோவை சரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.

படம் வெளியான மறுநாளே படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸின் ஸ்டன்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் ரஜினிகாந்த் மிகவும் பாராட்டியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் பாராட்டு குறித்து இயக்குனர் சாய் ரமணி கூறியதாவது,

“சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன்.

மக்கள் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனையால் நான் மிகவும் கவலைப்பட்டிருந்தேன். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு எங்களை அழைத்தார். அப்பொழுது அவரிடம் நான் லாரன்ஸ் மாஸ்டருடன் தொடர்ந்து இரண்டு வருடங்களாகப் பழகி வந்த எனக்கு அவரின் மேல் உள்ள அன்பின் அடிப்படையிலும், மக்களுக்கு உதவி செய்துவரும் அவர், மேலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும் தான் அந்த டைட்டிலை வைத்தேன்.

ஆனால் அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மனதை புண் படுத்திவிட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றேன். தற்போது சில திரையரங்குளில் மக்கள் சூப்பர் ஸ்டார் கார்டு நீக்கப்பட்டுவிட்டது. மற்ற திரையரங்குகளிலும் எடுத்துக் கொண்டே வருகிறோம், என்று எனது விளக்கத்தை அவரிடம் தெரிவித்தேன் .

சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னையும் எனது படத்தையும் மனதார பாராட்டியதும் எனது அடுத்த படத்திற்கும் வாழ்த்து தெரிவித்ததும் எனது வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒன்று,” என்று நெகிழ்கிறார் இயக்குனர் சாய்ரமணி.

Read Previous

Kavan Official Trailer

Read Next

Baahubali 2 trailer on 16 March

Most Popular