‘வைகை எக்ஸ்பிரஸ்’ – விறுவிறுப்பாக இருக்கும் – ஆர்கே

ஷாஷி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே., ரகுவரன், ரோஜா, வடிவேலு, பாமா மற்றும் பலர் நடித்து 2008ம் ஆண்டு வெளிவந்த ‘எல்லாம் அவன் செயல்’ படம் பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு படம்.

அப்படத்தை, ஏதாவது ஒரு சேனலில் தினமும், வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக் காப்பாற்றவில்லை.

படத்தின் அனல் பறக்கும் வசனங்களும் ஆர்கேவின் அதிரடி சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் அந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது.

இப்போது அதே ஆர்கே – ஷாஜி கைலாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் நாளை மறுநாள் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

“முந்தைய படத்தை விட இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும். இந்தக் கதையே ஒரு ரயிலில் நடப்பது போல் அமைந்துள்ளது. படம் ஆரம்பித்த உடனேயே வேகமெடுக்கும். அந்த வேகம் இறுதிக் காட்சியில் ரசிகர்களை சீட்டு நுனிக்கே கொண்டு சென்று விடும். ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பை இந்தப் படத்தில் அனுபவிக்கலாம்,” என்கிறார் ஆர்.கே.

‘எனக்கு சினிமா என்பது பேஷன். பணத்துக்காகவோ, நடிக்கவோ, படம் எடுக்கவோ வரவில்லை. சினிமா மீதான காதல் மட்டுமே என்னை சினிமாவுக்குள் ஈர்த்தது. எனவே என்னை பாதிக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார்.

சம்பாதிக்கும் நோக்கில் சினிமாவுக்கு வராத ஆர்கே-வே சினிமாவில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்து அதற்கு ‘ஹிட் பாக்ஸ்’ என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.

சினிமாக்காரர்கள் ஆர்கேவையும் அவரது புதிய முயற்சியையும் பயன்படுத்திக் கொள்வது அவர்களுக்கும் நல்லது என சினிமா வட்டாரங்களில் தற்போது பேச்சு எழுந்துள்ளது.

Read Previous

ராதாகிருஷ்ணன் அணிக்கு டி. சிவா அணி ஆதரவு

Read Next

Rajini says no to politics again

Most Popular