மே மாதம் ரஜினி – ரஞ்சித் படம் ஆரம்பம்

‘கபாலி’ படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித், ரஜினிகாந்த் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் மத்தியில் ஆரம்பமாக உள்ளது.

இது பற்றிய தகவலை இன்று மாலை டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

சிறிது ஓய்விற்குப் பிறகு ரஜினிகாந்த், பா. ரஞ்சித் இயக்க உள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

ப. பாண்டி – விமர்சனம்

Read Next

Power Paandi – Original Sound Track