சிவா இயக்கத்தில் சூர்யா

‘சிறுத்தை, வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ படங்களை இயக்கிய சிவா அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

தெலுங்கில் 2008ல் வெளிவந்த ‘சௌர்யம், சன்கம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா 2011ல் வெளிவந்த கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் ஆக அறிமுகமானார்.

அவரை தமிழில் இயக்குனராக அறிமுகப்படுத்திய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு 8 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பில் நடிக்கிறார் சூர்யா.

சூர்யாவின் 39வது படம் இது. சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே, காப்பான்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. மேலும், சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் தற்போது நடித்து வருகீறார்.

சூர்யாவின் 39வது படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Read Previous

தேவராட்டம் – டிரைலர்

Read Next

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

Most Popular