விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைத் தயாரித்த 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’.
அதன் டேக் லைன் ஆக ‘பகல் கொள்ளை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
‘இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன்முறையாக நடிக்கிறார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் தமிழில் நடிக்கும் படம் இது.
ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்று காலை இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.
சற்று முன்னர் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து படங்களை இயக்குபவரான ஜனநாதனின் இந்தப் பெயரும், அதற்கான டேக் லைனும் படம் வெளிவரும் போது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.