சிம்ரன் இடத்திற்கு அடுத்த போட்டி, சனா மக்பூல்

தமிழ்த் திரையுலகில் நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்து நம்பர் 1 நடிகையாக விளங்கியவர் சிம்ரன்.

அவரைப் போல நடனம் ஆடவும், நடிக்கவும் தெரிந்த அடுத்த தலைமுறை நடிகைகள் தமிழ் சினிமாவில் இன்னும் வரவில்லை.

பலருக்கும் சிம்ரனைப் போல வர வேண்டும் என ஆசை. ஆனால், அழகிலும், நடிப்பிலும் அவரை விட குறைவாகவே இருக்கிறார்கள்.

சிம்ரன் இடத்தைப் பிடிக்க தற்போது அறிமுகமாக உள்ள இரண்டு நடிகைகளிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

‘வனமகன்’ படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ள சாயிஷா சைகல் அடுத்த சிம்ரன் என ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட விஷால், கார்த்தி ஆகியோர் புகழ்ந்தனர்.

இப்போது சாயிஷாவுக்குப் போட்டியாக சிம்ரன் இடத்தைப் பிடிக்க ‘ரங்கூன்’ பட அறிமுக நாயகி சனா மக்பூல் போட்டி போட உள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் சனா மக்பூலை அடுத்த சிம்ரன் எனப் புகழ்ந்தார்.

சிம்ரன் இடத்தைப் பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது சனாவுக்குப் போகப் போகத் தெரியும்.

ரங்கூன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். கௌதம் கார்த்திக், சனா மக்பூல் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் ஜுன் 9ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

‘குள்ளன்’ என கமல்ஹாசன் குறிப்பிடுவது சரியா ?

Read Next

Sathriyan Official Trailer #2