2017ம் ஆண்டின் அரையாண்டு நிறைவு பெற்று விட்டது. இந்த அரையாண்டில் 100 படங்கள் வரை வெளியாகியுள்ளன.
100 படங்களில் 10 படங்கள் கூட வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை நிலைமை. ஆனாலும், சில படங்களுக்கு 100 கோடி வியாபாரம் நடந்தது, சில படங்கள் 100 கோடி வசூலித்தது என பொய்யான தகவலையும் பரப்பி விட்டார்கள்.
இந்த ஆறு மாதங்களில் சுமாராக வெற்றி பெற்ற படங்கள், சூப்பராக வெற்றி பெற்ற படங்கள், பிளாப் ஆன படங்கள் எவை என நாம் விசாரித்த வரையில் கிடைத்த பட்டியல்.
சூப்பர் வெற்றி
பாகுபலி 2
சுமார் வெற்றி
பைரவா
சி 3
குற்றம் 23
மாநகரம்
கடுகு
கவண்
ப பாண்டி
மரகத நாணயம்
சூப்பர் பிளாப்
போகன்
ப்ரூஸ் லீ
கடம்பன்
சத்ரியன்
அஅஅ
2017ம் ஆண்டின் அடுத்த அரையாண்டின் துவக்கமான ஜுலை மாதம் தியேட்டர்கள் ஸ்டிரைக்குடன் ஆரம்பமாகியுள்ளது.
தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு தள்ளாட்டம். தமிழ் சினிமாவைக் காப்பாற்ற உண்மையிலேயே முயற்சி செய்யப் போவது யார் ?.