ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், கோவை சரளா, சத்யன், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் டப்பிங் நேற்று முதல் ஆரம்பமானது.
அதிக பொருட் செலவில் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் டப்பிங் சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாக் ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி ராமசாமி, இயக்குனர் அட்லீ உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
‘மெர்சல்’ அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.