மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கி வரும் படம் ‘96’.
விஜய் சேதுபதி, த்ரிஷா முதன் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தில் காளி வெங்கட், வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இப் படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில் விஜய்சேதுபதி சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட உள்ளது.
இதுவரை விஜய்சேதுதுபதி நடித்து வெளிவந்த படங்களின் படப்பிடிப்பு இவ்வளவு வேறு பட்ட இடங்களில் நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் 30க்கும் மேற்பட்ட லொக்கேஷன்கள் இடம் பெற்றுள்ளன.
“இது ஒரு டிராவலிங் சம்மந்தப் பட்ட கதை என்பதால் இவ்வளவு லொகேஷன்கள் தேவைப்படுகிறது,” என்றார் இயக்குனர் பிரேம்குமார்.