பிஎன்பி சினிமாஸ் தயாரிப்பில் தினேஷ் பாபு இயக்கும் படம் ‘கிருஷ்ணம்’.
அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன், ஐஸ்வர்யாயா, மமிதா பஜ்ஜு மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள் .
படத்தின் இயக்குனர் தினேஷ் பாபு ஒளிப்பதிவாளராக மலையாளத்திலும், கன்னடத்திலும் பல வருடங்கள் பணியாற்றியவர். வித்தியாசமான கதைக்கள அமைப்பில் ‘கிருஷ்ணம்’ படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார்.
இந்தக் கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். இந்தக் கதையை படமாக்க முயற்சி செய்து கதாநாயகனாக நடிக்க பல நடிகர்களை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் யாரும் பொருத்தமானவர்களாக அமையவில்லையாம். கடைசியில் எந்த இளைஞனின் கதையை படமாக்க நினைத்தாரோ அவரையே கதாநாயகனாக்க முடிவு செய்து அவரையே வைத்து படத்தை இயக்கி முடித்துவிட்டார் .
உண்மையில் சிரித்த, அழுத நாட்களை சினிமாவுக்காக மீண்டும் ஒருமுறை கேமராவுக்கு முன்னால் நடித்தது அவருக்கு பெரும் சவாலாக இருந்ததாம். இயக்குனர் சொல்லிக் கொடுக்காமலேயே சில காட்சிகளில் மிக இயல்பாக நடித்தாராம் .
உண்மைச் சம்பவத்தில் வாழ்ந்தவர்களை சினிமாவுக்காக மீண்டும் ஒரு முறை கேமரா முன்பு நடிக்க வைப்பது என்பது பெரும் சவால் அதை தான் சிறப்பாக செய்திருப்பதாகக் கூறுகிறார் இயக்குனர் தினேஷ் பாபு.
இந்தப் படத்திற்கு ஹரி நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தியா பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது.