பிக் பாஸ் – இன்று வெளியேறுபவர் காயத்ரி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு புதிய திருப்புமுனையை இன்று சந்திக்க உள்ளது.

இந்த வாரம் வெளியேறுவதற்காக நாமினேஷன் செய்யபட்ட ரைசா, காயத்ரி ஆகிய இருவரில் வெளியேறுபவர் காயத்ரி என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

விஜய் டிவியின் இன்றைய பிக் பாஸ் புரோமோவில் கமல்ஹாசன் வெளியேறுபவர் பெயர் கொண்ட அட்டையை ரசிகர்கள் முன் திருப்பிக் காட்டும் போது அரங்கமே அதிர்கிறது. அதற்குக் காரணம் என்னவென்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

மேலும், இன்றைய புரோமோவை டிவிட்டரில் காயத்ரி அவருடைய டிவிட்டர் கணக்கில் ரி-டிவீட் செய்ததன் மூலம் அவர்தான் இன்று வெளியேறுபவர் என்பதை அவரே உறுதி செய்ததாகவும் ஆகிவிட்டது.

பிக் பாஸ் விஜய் டிவி என்ற  ரசிகர் டிவிட்டர் பக்கம் ஒன்றில் இருந்த இன்றைய புரோமோவை காயத்ரி ரி-டிவீட் செய்தார். அந்த ரி-டிவீட்டைக் கண்டு ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் உடனே அதில் கமெண்ட்டுகளைப் பதிவிட ஆரம்பித்தனர்.

காயத்ரி ஒருவேளை தெரியாமல் அதை ரி-டிவீட் செய்திருக்கலாம். கமெண்ட்டுகள் வர ஆரம்பித்ததும் காயத்ரி உடனடியாக அந்த டிவீட்டையே நீக்கிவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆரம்பமான அன்று கமல்ஹாசனுடன் நிற்கும் புகைப்படம்தான் அவர் இதற்கு முன் கடைசியா டிவீட் செய்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவர்கள் உடனடியாக அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் செயல்பட ஆரம்பிக்கவில்லை.

இன்றைய நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி வெளியேறுவது இன்று இரவுதான் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பிறகுதான் அனைவருக்கும் அது பற்றி தெரிய வரும்.

ஆனால், நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் ரி-டிவீட் செய்து தான் வெளியேறியதை மறைமுகமாகத் தெரிய வைத்துவிட்டார் காயத்ரி.

Read Previous

சமூக வலைத்தள செயல்கள், மன வருத்தம் தெரிவித்த அஜித்

Read Next

சினிமா ரொம்ப பிடிக்கும் – அன்புமணி ராமதாஸ்