‘மெர்சல்’னா மிரட்டலா இருக்கணும் – விஜய்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஏ.ஆர்.ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி மற்றும் சில கலை நிகழ்ச்சிகள் என விழாவுக்கு வந்த ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது,

‘‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் முரளி சார், அவருடைய மனைவி ஹேமா அவர்களுக்கும் வாழ்த்துகள். அவர்களுடைய 100வது படம். இந்த 100வது படம் வந்து ‘மெர்சல்’ படமா அமைஞ்சதுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

அடுத்து இந்த விழாவின் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சார் அவர்கள். அவங்களுக்கு சினிமாவுக்கு வந்து இது 25வது வருஷம். இந்த 25வது வருஷத்துல அவங்களோட சேர்ந்து நான் இந்தப் படத்துல வொர்க் பண்ணியிருக்கன்னு நினைச்சிப் பார்க்கும் போது உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷலா இருக்கு.

மெட்டுப் போட்டு ஆஸ்கர் வாங்கி, உலகத்தையே மெர்சல் ஆக்கினவரு, மெர்சலுக்கு மெட்டு போட்டிருக்காரு. பாட்டெல்லாம் கேட்டிருப்பீங்க, எப்படியிருக்குன்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனக்கு ஒவ்வொரு டியூனுமே கேக்கும் போது ரொம்ப சுகமா இருந்தது. பாடல் வரிகளாகட்டும், நன்றி விவேக், நன்றி ரகுமான் சார்.

அட்லீ, முதலில் தெறிக்கு நன்றி. எந்தே மேடையிலயுமே நான் சொன்னதில்லை. இந்தப் படமும் சரி மனசுக்கு ரொம்ப நெருக்கமா என்னால உணர முடிஞ்சுது.

சிங்கிள் ஆக்ஷன் படம்னாலே டைம் ஆகும். இந்தப் படத்துல டபுள் ஆக்ஷன் அப்படி, இப்படி இருக்கும் போது, பெர்பெக்ஷனோட, திட்டமிட்டு, ஆர்கனைஸ்டா ஆறேழு மாசத்துல முடிச்சது வந்து உண்மையிலேயே பெரிய விஷயம். அந்த விதத்துல அட்லீக்கும் அவருடைய உதவியாளர்களுக்கும், மற்ற கலைஞர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துகள்.

சமந்தா, காஜல், நித்யா மேனன், வடிவேல் சார், சத்யராஜ் சார், எஸ்.ஜே.சூர்யா சார், கோவை சரளா மேடம், ராஜேந்திர அண்ணன், யோகி பாபு, சத்யன், அப்துல் நடிச்ச எல்லா நடிகர்களுடைய சப்போர்ட்டாலதான் இது முடிஞ்சது, எல்லாருக்கும் நன்றி.
ஒரு சில விஷயங்கள் கொஞ்ச நாள் முன்னாடி உங்களுக்கு தெரியும். அது சும்மா மைன்ட்ல ஓடிக்கிட்டே இருந்தது. நான் வந்து அட்வைஸ் பண்றன்லாம் நினைச்சிக்காதீங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் கிடையாது. சின்னச் சின்ன எக்ஸ்பீரியன்ஸ் என் லைப்ல நடந்ததை நான் ஷேர் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்.

நான் வெளிய போகும் போது நண்பர்கள், ரசிகர்கள் பல பேரை சந்திக்கிறதுண்டு. அப்ப நிறைய பேசுவாங்க, ஆர்க்யுமென்ட் நடக்கும். அப்ப எல்லாரும் பொதுவா என்கிட்ட கேக்கற விஷயம். இந்த நெகட்டிவிட்டீஸ், அது எல்லாரை சுத்தியும் இருக்கும் இல்லை. அந்த மாதிரி, உங்களை சுத்தி இருக்கிற நெகட்டிவிட்டீஸை எப்படி சார் ஹேண்டில் பண்றீங்கன்னு கேப்பாங்க. சிம்பிள், இக்னோர் பண்ணுங்க. இக்னோர் பண்ணிட்டு உங்க வேலையை மட்டும் பார்த்து போயிக்கிட்டேயிருங்க.

கத்தி, கத்தி பார்த்துட்டு டயர்டாகிடுவாங்க. இது என் வாழ்க்கையில நிறைய நடந்திருக்கு அதனாலதான் சொல்றேன். தேவையில்லாம விஷயத்துக்குலாம் நாம ரியாக்ட் பண்ணிக்கிட்டு, வேண்டாம் நண்பா.

அதே நேரத்துல, அவ்வளவு ஈஸியா இந்த உலகத்துல நம்மை வாழ வைச்சிட மாட்டாங்க. போட்டு ஒரு வழி பண்ணுவாங்க. பக்கத்துல இருந்துக்கிட்டு நமக்கு ஒரு பிரஷர் கொடுப்பாங்க, அதையெல்லாம் தாண்டிதான் நாம வந்தாகணும்.

எல்லாருக்குமே நம்மள பிடிச்சிப் போச்சின்னா அப்புறம் லைப் போரடிச்சிடாது. அப்புறம் நீங்க யாருக்காக, என்ன சாதிப்பீங்க, யாரை சந்தோஷப்படுத்துவீங்க. கொஞ்ச பேருக்காவது நம்மள பிடிக்காம இருந்தால்தான், லைப் ஒரு மாதிரி ஜாலியா, சுவாரசியமா, இன்டிரஸ்டிங்கா இருக்கும்.

நம்ம கூட இருக்கிறவங்க எப்படின்றதையும் பார்த்துக்கணும். அழகும், ஆடம்பரமும் இருந்தால் ஆயிரம் பேர் கூட ஆசையா பழகுவாங்க, அன்பா இருந்தால் பழகற பத்து பேர் கூட உண்மையா இருப்பாங்க. நான் அன்பா இருக்கிறன்னு நினைக்கிறேன், அதனாலதான் எனக்கு கிடைச்ச இநத் உண்மையான நண்பர்கள்.

ஹிட், பிளாப், பிளாக் பஸ்டர் எல்லாம் கொடுத்துட்டீங்க நண்பா, அதையெல்லாம் கூட பெருசு, உங்களை நான் சம்பாதிச்சதுன்னுதான் நினைக்கிறேன்.

இரண்டு விஷயங்கள் உங்களைப் பத்தி சொல்லும்னு சொல்வாங்க. ஒன்னு, உங்க கிட்ட எதுவும் இல்லாத போது, உங்களுடைய உறுதி, இரண்டாவது உங்க கிட்ட எல்லாம் இருக்கும் போது, உங்களுடைய அணுகுமுறை. இதை வந்து அப்படியே ஈஸியா கடைபிடிச்சிக்கலாம்.

நண்பா, இதையெல்லாம் நான் சொல்றது, பேசறது இதெல்லாம் எங்கயோ, எப்பவோ வாழ்க்கையில பயன்படும்னா எடுத்துக்குங்க. வீட்டுல என் பையன்கிட்ட சொன்னால் கேட்க மாட்டான், உங்க கிட்டதான் பேச முடியும்.

‘மெர்சல்’ படத்தைப் பத்தி நானே என்ன சொல்றது, மக்கள்தான் பார்த்துட்டுதான் சொல்லணும். உங்க எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி பன்ச் டயலாக் ஒண்ணு சொல்லிட்டுப் போறேன்.

துப்பாக்கின்னா தோட்டா இருக்கணும், கத்தின்னா ஷார்ப்பா இருக்கணும், தெறின்னா தெனாவட்டா இருக்கணும், மெர்சல்னா மிரட்டலா இருக்கணும்.

இங்க வந்திருக்கிற அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி,” என தன்னுடைய பேச்சை மிகவும் இயல்பாகப் பேசினார் விஜய்.

 

Read Previous

விஜய் அறிக்கை, அஜித் அறிக்கை – வித்தியாசம் என்ன ?

Read Next

பிரசாத் அகாடமி பட்டமளிப்பு விழாவில் இயக்குனர் ஹன்சல் மேத்தா