புகழ் பெற்ற ‘பாரீஸ் கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் ‘மெர்சல்’

திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதும் கூட ஒரு கலைதான். சிறந்த படங்களை சிறந்த தியேட்டர்களில் பார்க்கும் ரசனையே தனி.

டால்பி, டிஜிட்டல், அட்மாஸ், 2 கே, 4 கே என தியேட்டர்களில் ஒலி, ஒளி அமைப்புகளில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்ட நிலையில் முன்னேற்றமடைந்த தியேட்டர்களில் படங்களைப் பார்ப்பதையே ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

மாநகரங்களில் தியேட்டர்கள் ஏறக்குறைய மாறி விட்ட நிலையில் நகரங்களிலும், சிறு நகரங்களிலும் இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது.

படங்களைப் பார்த்து ரசிப்பதில் நாம் எப்படியோ அதே போலத்தான் பிரெஞ்ச் நாட்டிலும், பிரெஞ்ச் படங்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. படங்களை சிறப்பாகப் பார்த்து ரசிப்பதற்கென்றே பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் ‘கிரான்ட் ரெக்ஸ்’ என்ற புகழ் பெற்ற தியேட்டர் இருக்கிறது. ஐரோப்பா கண்டத்திலேயே மிகப் பெரிய தியேட்டர் அது.

முதன் முறையா அந்தத் தியேட்டரில் திரையிடப்பட்ட படம் என்ற பெருமை ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்திற்குக் கிடைத்தது. அடுத்து ‘மெர்சல்’ படத்திற்கு அந்தப் பெருமை கிடைக்க உள்ளது.

வரும் அக்டோபர் 18, 19 தேதிகளில் ‘கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் ‘மெர்சல்’ படம் பிரெஞ்ச் மொழி சப்டைட்டிலுடன் திரையிடப்பட உள்ளது.

18ம் தேதி 500 சீட்டுகள் கொண்ட ‘ரூம் 2’ தியேட்டரிலும், 19ம் தேதி 1200 சீட்டுகள் கொண்ட ‘கிரான்ட் லார்ஜ்’ தியேட்டரிலும் 15 மற்றும் 20 பிரான்க்குகள் கட்டணத்தில் ‘மெர்சல்’ திரையிடப்பட உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் விஜய்க்கு மிகப் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதிலும், புகழ் பெற்ற ‘கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் ‘மெர்சல்’ திரையிடப்பட உள்ளதால் அங்குள்ள விஜய் ரசிகர்களுக்கு சரியான கொண்டாட்டம் காத்திருக்கிறது.

‘கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டர் இணையதளத்திலும் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

Read Previous

அவள் – டீசர்

Read Next

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு ?