துபாயில் அக்டோபர் 27ம் தேதி ‘2.0’ இசை வெளியீடு

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீடு, அக்டோபர் 27ம் தேதி துபாயில் உள்ள புர்ஜ் பார்க்-கில் நடைபெறுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மறைந்த நா. முத்துக்குமார் மற்றும் மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்கள்.

மிகப் பிரம்மாண்டமான நடைபெற உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டில் படத்தின் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

ஏ.ஆர்.ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடைபெறும் எனத் தெரிகிறது.

துபாயில் நடைபெறும் இசை வெளியீட்டைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் டீசர் வெளியீடும், சென்னையில் டிரைலர் வெளியீடும்,  நடைபெற உள்ளது.

ஜனவரி 25ம் தேதி ‘2.0’ உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

Read Previous

மேயாத மான் – டிரைலர்

Read Next

சிம்பு எனக்கு ‘காட் ஃபாதர்’ – சந்தானம்