10 லட்சம் லைக்குகள், ‘மெர்சல்’ டீசரின் அடுத்த சாதனை

விஜய், அஜித் படங்களின் டீசர், டிரைலர் வெளிவந்தால் அவை யு டியூபில் என்ன மாதிரியான சாதனை படைக்கிறது என்பது அவர்களுடைய ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டியாக இருந்து வருகிறது.

‘விவேகம்’ டீசர் கடந்த மாதம் உலகத்திலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் புரிந்து உலக சாதனை படைத்தது. ஆனால், அந்த சாதனையை ‘மெர்சல்’ டீசர் சுமார் 4 மணி நேரங்களுக்குள் கடந்து யு டியூபையே அதிர வைத்தது.

‘விவேகம்’ டீசர் அந்த உலக சாதனையை ஏற்படுத்த 4 மாதங்கள் ஆனது.  ஆனால், ‘மெர்சல்’ டீசர் அதை 4 மணி நேரங்களுக்குள் கடந்து சாதனையை ஏற்படுத்தியது.

இந்திய அளவில் அதிக வியாபாரம் உள்ள தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்கள் புரியாத சாதனையை தமிழ்ப் படமான ‘மெர்சல்’ ஏற்படுத்தியது ஆச்சரியமான ஒன்று.

நேற்று இரவு ‘மெர்சல்’ டீசரின் லைக்குகளை மேலும் ஒரு சாதனையைப் படைத்தது. 10 லட்சம் லைக்குகளைக் கடந்ததுதான் அந்தப் புதிய சாதனை. உலக அளவில் வேறு எந்த ஒரு திரைப்படமும் புரியாத அந்த 1 மில்லியன் லைக்குகள் சாதனையை ‘மெர்சல்’ சுமார் 25 நாட்களுக்குள் புரிந்துள்ளது.

‘மெர்சல்’ டீசருக்கு இன்னும் 13 லட்சம் பார்வைகள் கிடைத்தால் அதன் பார்வை எண்ணிக்கை 3 கோடியைக் கடக்கும். இந்த சாதனையும் இன்னும் சில நாட்களில் நடந்துவிடும்.

தீபாவளி தினத்தன்று ‘மெர்சல்’ படம் உலகம் முழுவதும் சுமார் 3300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

Read Previous

சிம்பு எனக்கு ‘காட் ஃபாதர்’ – சந்தானம்

Read Next

புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புப் நிகழ்ச்சிகள்