உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியார், விஷால், ஹன்சிகா மற்றும் பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளியானப் படம் ‘வில்லன்’.
இந்தப் படத்தில் மோகன்லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும் , விஷால் டாக்டராகவும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த வில்லன் திரைப்படம் தான் விஷால், மலையாளத்தில் அறிமுகமான முதல் படம்.
வில்லன் திரைப்படம் மலையாளத்தில், மோகன்லால் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. இப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்துவிட்டது, குறிப்பிடத்தக்கது.
‘த்ரிஷ்யம்’ திரைப்படத்துக்குப் பின்னர் மோகன்லாலின் நடிப்பை அனைவரும் ரசித்து பாராட்டிய திரைப்படம் இது தான், என்று கேரள ரசிகர்கள் கூறுகிறார்கள்.