விஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’.

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக் கொண்டு ஒரு டிராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ.

தமிழில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கியதற்குப் பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப் பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் தான் ‘சென்னை பழனி மார்ஸ்’.

பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றை கவனிக்க, தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளாராம் விஜய் சேதுபதி.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார், தட்சிசிணாமூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Read Previous

எஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி

Read Next

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’