குழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டான் சான்டி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜீவா, ஷாலினி பான்டே, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் கொரில்லா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பல திரைப் பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசியதாவது,

“என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மனிதர்களை வைத்து படமெடுப்பதே பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன், நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன். யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப் படத்தில் அவரையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்,” என்றார்.

இயக்குநர் டான் சாண்டி பேசுகையில்,

“இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பன்ஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை ‘கற்றது தமிழ்’ படத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்தப் படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக் குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மசாஜ் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்,” என்றார்

இசை அமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது,

“முன்னாடியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் இது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்த படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப் படத்தைப் பார்க்கும் போது நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அவை நன்றாகவும் இருந்தது. இந்தப் படம் எனக்கு மிகப் புதுமையாக இருந்தது. பாடலாசியர்கள் யுகபாரதி, லோகன் இருவரும் நன்றாக பாடல் எழுதி இருக்கிறார்கள். இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய மியூசிக் டீம் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படத்தில் நிறைய அரசியல் நய்யாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்,” என்றார்.

நடிகர் சதிஷ் பேசுகையில்,

“இந்தப்படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அது கூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது. ஒவ்வொருத்தரும் படத்தில் என்ஜாய் பண்ணி நடித்திருக்கோம். இயக்குநர் டான் சாண்டி சொன்னதைச் செய்தாலே போதும், அவருக்கு காமெடி அப்படி வரும்,” என்றார்

நடிகர் ஜீவா பேசியதாவது,

“கொரில்லா படம் ஒரு எக்ஸ்டாடினரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன், இந்தப் படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு, அதனால் தான். இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியாக ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கொரில்லா மாதிரி ஒரு படம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. இந்த மாதிரி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளருக்கு மறுபடியும் ஒரு நன்றி. டான் சாண்டி இந்தக் கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்ஜாய் பண்ணிக் கேட்டேன். படத்தையும் என்ஜாய் செய்து நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும். யுகபாரதி சாருக்கு நன்றி. அவர் எனக்கு நல்ல நல்ல பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்,” என்றார்

தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசுகையில்,

“இந்தப் படத்தை பண்ணும் போது குரங்கை வைத்து பண்ணாமல் சிம்பான்ஸியை வைத்து எடு என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னார். சாண்டி சிறப்பாக படத்தை எடுத்து இருக்கிறார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை தியேட்டரில் சென்று, பாருங்கள்” என்றார்

இந்த விழாவில் அழிந்து வரும் உயிரினமான சிம்பான்ஸி குரங்கில் இரண்டை திரைப்படக்குழு தத்தெடுத்தது. ‘கொரில்லா’ படம் வரும் ஜுன் மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Read Previous

கென்னடி கிளப் – டீசர்

Read Next

‘ஹவுஸ் ஓனர்’ – சென்னை வெள்ளத்தின் உணர்வுபூர்வ படம்

Most Popular