சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சந்திரமுகி, தர்பார் படங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ‘தர்பார்’ படத்திற்கு அடுத்தே அவர் மீண்டும் ரஜினியுடன் நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, படத்தில் ரஜினியின் முன்னாள் ஹீரோயின்களான குஷ்பு, மீனா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் தான் படத்தின் நாயகி என்றும் அறிவிக்கப்பட்டார்.
இப்போது நயன்தாராவும் படத்தில் இணைந்திருப்பதால் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது