தனி விமானத்தில் பறந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். கொரானோ காரணமாக ஊரடங்கு இருப்பதால் பேருந்துகள், ரயில்கள் இல்லாத காரணத்தால் வெளி மாநிலங்களில் வசிக்கும் பெரும்பாலான  மக்கள் கேரளா செல்ல முடியாமல் அவரவர் வசிக்கும் இடங்களிலேயே ஓணம் கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை தன் குடும்பத்தார், நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து கொச்சி சென்றுள்ளார். அவருடன் காதலர் விக்னேஷ் சிவனும் உடன் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் வழக்கம் போல பொறாமையில் பல்வேறு கிண்டலான கமெண்ட்டுகளை அடித்து வருகின்றனர். பண்டிகை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில் ஒரு தமிழ் நடிகை சென்றது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். நயன்தாரா வாங்கும் சம்பளத்திற்கு இதெல்லாம் பெரிய விஷயமேயல்ல.

 

Read Previous

ஆகஸ்ட் 31ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

செப்டம்பர் 1ம் தேதியில் வெளியான படங்கள்…