‘மரபு’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் படம் ‘மரபு’. 

இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம். 

எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது.

நாயகனாக விக்டர், நாயகியாக இலக்கிய, வில்லனாக ஆனந்த் பாபு, நாயகியின் அம்மாவாக ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்பக் கலைஞர்கள்  பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. தியேட்டர், ஓ.டி.டி. என்று பல தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். 

ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.

Read Previous

கலர்ஸ் தமிழ் – ‘எங்க வீட்டு மீனாட்சி’….புதிய தொடர் ஆரம்பம்…

Read Next

விக்ரம் 60ன் பெயர் ‘மகான்’, முதல் பார்வையும் வெளியீடு