உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு நிறைவு

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மாமன்னன்’. 

இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்க வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே நிறைவு பெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

‘பரியேறும் பெருமாள், கர்ணன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

பரோல் – குடும்பப் பின்னணியில் ஒரு எமோஷனல் கதை

Read Next

வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

Most Popular