டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் “மாளிகப்புரம்” 

 

தெய்வீக டிராமா திரைப்படம் "மாளிகப்புரம்" பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் மாளிகப்புரம் படம், முழுக்க முழுக்க குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட படம். அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியிருந்தார்.
 
குழந்தை நட்சத்திரங்களான தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, சபரிமலைக்கு மலையேற்றம் செய்யும் சுவாமியாக உன்னி முகுந்தன் படத்தில் பிரமிக்க வைக்கிறார். சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், TG.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுதியுள்ளார். சந்தோஷ் வர்மா,  B.K. ஹரிநாராயணன் பாடல்களை எழுத, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஷமீர் முகம்மது படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். Ann Mega Media மற்றும் Kavya Film Company  சார்பில்  பிரியா வேணு மற்றும் நீதா பின்டோ இணைந்து தயாரித்துள்ளனர்.

Read Previous

அமெரிக்க திரைப்பட விழாவில் மாமனிதன்

Read Next

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் “பகாசூரன்” பட பாடல் 

Most Popular