சூர்யாவின் ‘கங்குவா’ முன்னோட்டத்திற்குப் பெரும் வரவேற்பு

ஸ்டுடியோ க்ரீன், யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கங்குவா’.

இப்படத்தின் வீடியோ முன்னோட்டம் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. 2 நிமிடம் 21 வினாடிகள் உள்ள இந்த முன்னோட்ட வீடியோவிற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்புகிடைத்து வருகிறது.

செந்தமிழில் சூர்யா பேசம் வீர வசனத்துடன் ஆரம்பமாகும் வீடியோவில் உள்ள காட்சிகள் கடைசியில் சூர்யா தோன்று ‘நலமா’ எனக் கேட்பது வரை மிரட்டலாக உள்ளது. 2024ல் வெளிவர உள்ள இப்படத்தின் வீடியோவில் உள்ள காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்டமான பான் இந்தியா படைப்பாக வெளிவர உள்ள இந்த முன்னோட்ட வீடியோ தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

நேற்று இரவு இந்த வீடியோவை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டனர். அப்போது பேசிய இயக்குனர் சிவா, “கங்குவா’ என்பதில் உள்ள ‘கங்கு’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். இப்படம் தற்போது நடப்பது போலவும், 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பது போலவும் சரித்திரப் படமாகவும், இன்றைய கால கட்டப்படமாகவும் உருவாகி வருகிறது.

நான்கு வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. அதற்கான சூழ்நிலை இப்பதான் அமைந்தது. எல்லாருக்குமே இப்படி ஒரு படம் பண்ணணும்னு ஒரு ஆசை இருக்கும் இல்லையா, அதுவுமில்லாம கதையும் நல்லா வந்தது. சூர்யா சாருக்கு கதை சொன்னதும் பிடிச்சிருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாரும் நல்ல பட்ஜெட், தைரியமா எடுக்கலாம்னு சொன்னாரு.

ஒரு புது அனுபவம் இந்தப் படத்துல கிடைச்சிருக்கு. வேலை பார்த்த டெக்னீஷியன்கள், நடிகர்கள் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச படமா இருக்கு. அடர்ந்த காடுகளுக்குள்ள நடந்து போய் படமாக்கினோம். சூர்யா சார் 100 சத உழைப்பைக் கொடுத்து பண்ணிட்டு வராரு. படமாக்கப்பட்ட காட்சிகள் பிரமாதமா வந்திருக்கு,” என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்டுடியோ க்ரீன் சிஇஓ தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read Previous

யோகிபாபு நடிக்கும் ஃபேண்டசி திரைப்படம் “வானவன்”!

Read Next

சூர்யாவின் ‘கங்குவா’ – முன்னோட்ட வீடியோ