கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லித்தந்த சாண்டி

2019ம் வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை வந்தவர் நடன இயக்குனர் சாண்டி. கடந்த வருட நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் நல்ல பெயரை எடுத்த ஒரு போட்டியாளராக இருந்தார்.

இந்த வருட பிக் பாஸ் சீசனுக்கான புதிய புரோமோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. அதன் துவக்கத்தில் கமல்ஹாசன் நடனமாடியபடி வருவார். அந்த நடனத்தை கமல்ஹாசனுக்கு சொல்லித் தந்தது அந்த புரோமோவுக்கு நடன இயக்குனராக இருந்திருக்கிறார் சாண்டி.

கொரானோ பாதுகாப்பு பற்றியும் அந்த புரோமோவில் சொல்லப்பட்டு இருந்ததால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தது பற்றி தனது இன்ஸ்டாகிராமில், “கமல்ஹாசன் சாருட்ன் பணிபுரிந்தது மகத்தான இன்பம். சினிமா மீதான அவருடைய ஆழ்ந்த அறிவும், அன்பும் நான் எப்போதும் வியக்கும் ஒன்று. உண்மையாகவே சிறந்த முன்னுதாரண மனிதர் சார் நீங்க,” எனக் கூறியுள்ளார்.

இந்த வருட பிக் பாஸ் சீசன் 4 அக்டோபர் மாதம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.

Read Previous

செப்டம்பர் 7ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

செப்டம்பர் 8ம் தேதியில் வெளியான படங்கள்…