‘ஜெட்டி’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

நவீனமான இந்த நூற்றாண்டிலும், கலாச்சாரம், கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன. அப்படிப்பட்ட ஒரு கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஜெட்டி’

கடல் சார்ந்த மீனவ கிராமங்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டி , அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வதோடு மட்டும் அல்லாமல், அதற்குண்டான நிரந்தர தீர்வுகளையும் சொல்லும் உயர்ந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இது. 

நந்திதா சுவேதா, புதுமுகம் மான்யம் கிருஷ்ணா, கிஷோர், மைம் கோபி, சுமன்ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் . 

"ஜில் ஜில் ஜில்" என்ற இளமை துள்ளலான பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் தேஜாஸ்வினி. 

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிகமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் கே. வேணு மாதவ். 

ஒரே ஒரு முறை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி கொரோனா  காலத்திலே படம் எடுக்க வைத்து, திரைக்கதை எழுதி, யதார்த்தமாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பி. சுப்பிரமணியம். 

பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் இணை ஒளிப்பதிவாளர் வீரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார் . 

இயக்குனர் பி. வாசுவின் உதவியாளர் தி.ரமேஷ் பிரபாகரன் வசனம் எழுதி இருக்கிறார். கார்த்திக் கொடக்கன்ட்லாவின் இசையில் அத்தனை  பாடல்களையும் கவிஞர் டாக்டர் கிருதியா எழுதியுள்ளார். விஜய் பிரகாஷ், விஜய் யேசுதாஸ், பாலக்காடு ஸ்ரீராம் , ஸ்ரீகாந்த் ஹரிஹரன், வைக்கம் விஜயலக்ஷ்மி, பத்மஜா, ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர் .

சமீபத்தில் இயக்குனர் பொன்ராம் அவருடைய அடுத்த படமான எம்ஜிஆர் மகன் வெளியீட்டு வேலைகளில் இருந்த போதிலும், இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி உள்ளார்.

Read Previous

ஜெய் பீம் – டீசர்

Read Next

கண்ணம்மா என்னம்மா – மியூசிக் வீடியோ வெளியீடு

Most Popular