விஜய்யின் ‘ஜன நாயகன்’, 2026 பொங்கல் ரிலீஸ்
24 Mar 2025
கன்னடத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அக்டோபர் 5ம் தேதி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அடுத்த வருடம் நடக்க உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தீவிரமாக களமிறங்க உள்ளார். அதனால், இந்த ‘ஜனநாயகன்’ படத்துடன் நடிப்பிலிருந்து விலகுகிறார். எனவே, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாக உள்ளது.
படத்தை 2026ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியிட உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே படத்தின் வெளியீட்டை அறிவித்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இப்படத்திற்கான வியாபாரங்கள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டதாகவும் தகவல்.
https://x.com/KvnProductions/status/1904149489377853602
Tags: jananayagan, vijay, pooja hegde, mamita baiju, bobby deol