விஜய் நடித்த கடைசி படம் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ZEE தமிழ் மற்றும் ZEE 5 தளங்களில் ஒளிபரப்பப்படுகிறது.
எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படம் அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடந்தது. வெளிநாட்டில் நடைபெற்ற விழாவை நேரில் காண முடியாத ரசிகர்கள், ZEE 5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி அதை பிரத்யேகமாக ஒளிபரப்புகின்றன.
விழாவில் நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையின் இறுதி மேடை உரையை வழங்கி ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தினார். பல முன்னணி இயக்குநர்களும் திரையுலக பிரபலங்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.