இளையராஜா இசையில் உருவாகும் “மைலாஞ்சி”!

 

அஜய் அர்ஜூன்  ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்  சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தின்  தலைப்பு "மைலாஞ்சி" என வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா  பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் . வெற்றி மாறனின் விடுதலை  படத்துக்குப் பிறகு அவரே பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு . ஒளிப்பதிவு செழியன்,  படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை இயக்குனர் லால்குடி இளையராஜா  என  வலுவான கூட்டணியுடன் களமிறங்கும் இப் படத்தில்  கன்னிமாடம் புகழ் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும்  கோலிசோடா 2 நாயகி க்ருஷா குரூப் ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க  உடன் யோகிபாபு, முனிஷ் காந்த் ஆகியோரும் நடிக்க, படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து ஊட்டியில் நடைபெற்று  வருகிறது.

Read Previous

செப்டம்பர் 28ல் வெளியாகும் “பார்க்கிங்”!

Read Next

இறைவன் – டிரைலர்

Most Popular