ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம்

‘அந்தகாரம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘அந்தகாரம்’. விக்னராஜன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தினை அட்லி மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டார்கள். நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி, நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது விக்னராஜன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. இதில் நாயகனாக நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று (ஜுன் 29) ஹரிஷ் கல்யாணி பிறந்த நாள். இதனால் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஹரிஷ் கல்யாணுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Read Previous

பொய்ப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள் – விஜய் பேச்சு

Read Next

’சர்தார் 2’வில் நடைபெற்றுள்ள மாற்றம்

Most Popular