’கூலி’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘கூலி’. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. தற்போது ஜூலையில் தொடங்க திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.
இதனிடையே, ‘கூலி’ படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்காக டெஸ்ட் ஷூட் செய்து பார்க்கலாம் என்றெல்லாம் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், தந்தையாக இருப்பதால் முழுமையாக கவனம் செலுத்த முடியாது என்று விலகிவிட்டார் ரன்வீர் சிங்.
தற்போது அந்த கதாபத்திரத்தில் ஃபகத் பாசில் நடிப்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக கமல் – லோகேஷ் கனகராஜ் இணைந்த ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபகத் பாசில். மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தில் ஃபகத் பாசில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் என்ன கதாபாத்திரம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.