நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில், மோகன்ஜி இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திரௌபதி 2’.
ஜனவரி 23 வெளியாக உள்ள இப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறுகையில்,
“நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி.
‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல! அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன் சார் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இசையில் பல புதிய விஷயங்களை ஆராய்ந்து கொண்டு வந்தேன். அதேபோன்று நிறைய ஆராய்ந்து இந்தப் படத்திலும் புது இசையை கொடுத்திருக்கிறேன்.
பிலிப் கே. சுந்தரின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு இணையாக பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது என நம்புகிறேன். நாளை திரையரங்குகளில் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன்,” என்றார்.