தனுஷ் படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்

2016ல் வெளிவந்த ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றவர் அதன் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன்.

அதன் பின் அரவிந்த்சாமி நாயகனாக நடித்துள்ள ‘நரகாசூரன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அடுத்து அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ படத்தையும் இயக்கி உள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

தனது நான்காவது படமாக தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை அவர் இயக்க உள்ளார்.

தனுஷின் 43வது படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தனுஷ் நடித்து வெளிவந்த ‘பட்டாஸ்’ படத்திற்குப் பிறகு அந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது.

தனுஷின் 43வது படமாக ராம்குமார் இயக்கும் படம்தான் தயாராவதாக இருந்தது. ஆனால், இந்தப் படத்தின் பட்ஜெட், முன் தயாரிப்பு பணி ஆகியவற்றிற்கு அதிக நேரம் தேவைப்படுவதால் அதற்கு முன்னதாக கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கதாநாயகி மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்தை அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

கமர்ஷியல் படமாக வரும் ‘சீறு’

Read Next

பொம்முக்குட்டி அம்மாவுக்கு – விஜய் டிவியில் புதிய தொடர்

Most Popular