மலைப்பகுதியில் பாரத்தை சுமந்து சென்ற சுனைனா!

கேரளாவில் உள்ள தொடுபுழாவை சேர்ந்த மலைப்பகுதிகளில் “ரெஜினா” படத்திற்காக சில முக்கியமான காட்சிகளை படமாக்கப்பட்டது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு தளத்தை அடைய சில மைல் தூரம் நடக்கவேண்டி இருந்தது. நடிகை சுனைனாவும் தான் கொண்டுவந்த பொருட்களை தூக்கிக்கொண்டு படக்குழுவினருடன் சேர்ந்து நடந்தே சென்றார். இப்படி பல நாட்கள் படமாக்கப் பட்டது.

வரும் ஜூன் 23ஆம் தேதி ‘ரெஜினா’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர், இயக்குநர் டொமின் டி’சில்வா உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் இந்த படத்தில் சுனைனாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவு குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

இருக்கை நுனியில் அமரவைக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தமிழில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா'. 

 

Read Previous

முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம் ” லில்லி “

Read Next

ஜூன் 29 அன்று வெளியாகும் நிகில் சித்தார்த்தா நடித்த ‘ஸ்பை’!!