கஸ்டடி படத்தில் ராஜூ (எ) ராசுவாக அரவிந்த் சுவாமி!

வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ் – தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி இருக்கும் 'கஸ்டடி' படத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அரவிந்த் சுவாமியின் கேரக்டர் போஸ்டரை இன்று தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ராஜு என்ற ராசு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அரவிந்த் சுவாமி. 

இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளார். அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பவன்குமார் வழங்குகிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

கஸ்டடி மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

 

Read Previous

அயோத்தி – விமர்சனம்

Read Next

முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

Most Popular