கலர்ஸ் தமிழ் டிவி – ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’ புதிய நிகழ்ச்சி

கலர்ஸ் தமிழ் டிவி ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK) என்ற பெயரில் புத்தம் புதிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஞாயிறு பிப்ரவரி 28 முதல் ஆரம்பித்துள்ளது.

குடும்பத்தினருடன் இணைந்து கவலைகளை மறந்து கலகலப்பாக பொழுதுபோக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது.

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், தொடர்கள் ஆகியவற்றில் நடிக்கும் நட்சத்திரங்களின் குழுக்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

விதவிதமான சுற்றுக்களுடன் அவர்கள் போட்டி போடும் நிகழ்ச்சி இது. அஞ்சனா ரங்கன், கமல் தண்டபாணி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள். 

நடனம், இசை ஆகியவற்றோடு குதூகலமும், கேளிக்கையும் நிறைந்த சுவாரசிய நிகழ்ச்சி இது. 

இந்த புதிய நிகழ்ச்சியின் தொடக்கம் குறித்து கலர்ஸ் தமிழ் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் கூறுகையில்,

“எங்கள் நெடுந்தொடர்கள் ரசிகர்களைக் கவர்வதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர்கள் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிரோட்டமுள்ளதாக செய்வதற்கு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.  

இந்த நட்சத்திரங்களது சின்னத்திரை மற்றும் நிஜவாழ்க்கைத் திறன்களை அங்கீகரிக்கின்ற ஒரு பொருத்தமான கொண்டாட்டமாக சிஎஸ்கே நிகழ்ச்சி இருக்கும்.  ஒரு தளத்தில் எமது நட்சத்திரங்களை ஒன்றாக அழைத்து வந்து, அதிக குதூகலத்துடனும், ஆரவாரத்துடனும் இதுவரை வெளியில் தெரியாமல் மறைந்திருந்த அவர்களது திறமைகளை இந்நிகழ்ச்சியின் மூலம் கொண்டாடுவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது.  

இலட்சக்கணக்கான குடும்பங்களில் அனைவரும் ரசித்து கொண்டாடி மகிழ்கின்ற மிகப்பெரிய வெற்றி நிகழ்வாக சிஎஸ்கே இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார்.

Read Previous

கர்ணன் – பண்டாரத்தி புராணம்…பாடல் வரிகள் வீடியோ

Read Next

மார்ச் 3ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular