எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.
இப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
அமெரிக்காவில் இப்படத்தை இதற்கு முன் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
அது பற்றி அமெரிக்காவில் படத்தை வெளியிடும் பிரைம் மீடியா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 24ம் தேதியே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளை நடத்த உள்ளார்களாம். மேலும் அக்டோபர் 25ம் தேதி அமெரிக்கா முழுவதும் 41 மாநிலங்களில், 160 நகரங்களில் 250க்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
வரும் திங்கள் கிழமை அது பற்றிய முழு விவரத்தையும் அளிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.