அதிக திரையரங்குகளில் ‘அயலான்’

தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ‘அயலான்’ திரைப்படம் வெளியாகி இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் வெளியீடாக ’அயலான்’, ‘கேப்டன் மில்லர்’, ‘மெரி கிறிஸ்துமஸ்’, ‘ஹனுமன்’ மற்றும் ‘குண்டூர் காரம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளது. 

இதில் ‘ஹனுமன்’ படத்தினை சக்தி ஃபிலிம் பேக்டரி மற்றும் ‘குண்டூர் காரம்’ படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் ஆகியவை வெளியிட்டுள்ளன. 

‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் நேரடியாக மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் தனித்தனியாக ஏரியா வாரியாக விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தப் படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இறுதியாக, ‘அயலான்’ படத்துக்கு 489 திரையரங்குகளும், ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு ‘438’ திரையரங்குகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

’அயலான்’  திரைப்படம் ஏலியன் சம்பந்தப்பட்டது என்பதால், குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்ற காரணத்தால் இந்த முடிவு எடுத்துள்ளார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

Read Previous

‘அயலான்’ சிக்கல்களுக்குத் தீர்வு: ஆரம்பம் முதல் இறுதிவரை நடந்தது என்ன?

Read Next

விமலை வைத்து தேசிங்குராஜா-2 இயக்கும் எழில்

Most Popular