புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா மற்றும் பலர் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’, ஒரு ஃபேண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்.
முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோருடன் இணைந்து ரக்ஷித், சான்வி ஸ்ரீவஸ்தவா சிறப்பாக நடித்துள்ளனர்.
புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’. அதனைத் தொடர்ந்து, கன்னடத் திரையுலகில் சிறந்த திரைப்படங்களைத் தயாரிக்கும், அனைத்து வகை திரைப்படங்களையும், மொழி வேறுபாடுகளையும் கடந்து வெற்றிப் பெறச் செய்வதில் முனைப்புடன் செயல்படுத்துபவராக இருக்கிறார்.
அவரது முதல் திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் தயாரித்த ‘கிரீக் பார்ட்டி, ஹம்பிள் பாலிடீசியன் நோக்கராஜ், கதையொந்து ஷுருவாகிதே, ஜீர்ஜிம்பே’ ஆகிய அனைத்தும் மகத்தான வெற்றிப்படங்கள். குறிப்பாக ‘கிரீக் பார்ட்டி’ கன்னடத் திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த சில குறிப்பிட படங்களில் ஒன்று என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி என்ற ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம்.
இப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு நகைச்சுவை காவலராக நடிக்க, அவருடன் இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான வழிப்பறித் திருட்டு கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல்வாதியையும், சமாளித்து எப்படி அந்த மர்மத்தை தீர்த்து வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள். ரக்ஷித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஷான்வி இப்படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் ‘தி செவன் ஆட்ஸ்’ (The Seven Odds) எனும் குழு. இக்குழு ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின் (இயக்குனர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது. ஏழு பேரைக் கொண்ட இந்த குழு, பல அருமையான கதைகளை எழுதி, பிரமிக்கத்தக்க திரைப்படங்களாக உருவாக்கி, அதை வெற்றிப்படங்களாக உயர்த்துவதில் சாதனை படைத்து வருகிறது.
கரம் சாவ்லா ஒளிப்பதிவில், உல்லாஸ் ஹைதூர் கலை வண்ணத்தில் பிரமிப்பூட்டும், பிரம்மாண்டமான செட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அமராவதி நகரை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இப்படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பாளரான அருந்ததி அஞ்சனப்பா, 1980-களில் நிலவி வந்த பேஷன் குறித்த தனது விரிவான ஆராய்ச்சிகளின்படி ஆடை வடிவமைப்பு செய்தது, பாராட்டுதலை பெற்றிருப்பதோடு, படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.
அஜநீஷ் லோக்நாத் பின்னணி மற்றும் இரண்டு பாடல்களுக்கு இசை அமைக்க, இப்படத்தின் வேறு இரண்டு பாடல்களுக்கு சரண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.
‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற எம்ஆர். ராஜாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார்.
சச்சின் இப்படத்தின் இயக்கம், படத்தொகுப்பு, மற்றும் விஎப்எக்ஸ் சிறப்பு காட்சி அமைப்புகள் என மூன்று பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார்.
இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடுகிறார்கள்.
தமிழில் இப்படம் ஜனவரி 3, 2020 அன்று வெளியாகிறது.
நடிகர்கள் :
ரக்ஷித் ஷெட்டி
ஷான்வி ஸ்ரீவஸ்தவா
பாலாஜி மனோகர்
பிரமோத் ஷெட்டி
மதுசூதன் ராவ்
அச்யுத் குமார்
கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே
மற்றும் பலர்
தொழிட்நுட்பக் கலைஞர்கள் :
தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா
வி எப் எக்ஸ், படத்தொகுப்பு மற்றும் இயக்கம்: சச்சின்
கதை: தி செவன் ஆட்ஸ் (The Seven Odds)
ஒளிப்பதிவு: கரம் சாவ்லா
இசை: அஜநீஷ் லோக்நாத் & சரண்ராஜ்
கலை: உல்லாஸ் ஹைதூர்
நடனம்: இம்ரான் சர்தாரியா
சண்டைபயிற்சி: விக்ரம் மூர்
ஆடை வடிவமைப்பு: அருந்ததி அஞ்சனப்பா
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்