வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்டும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்க ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது.