அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு நடிக்கும் புதிய படம்

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, அர்ஜுன் தாஸ், ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்த மலையாள நடிகை அன்னா பென், யோகிபாபு, ஆகியோர் நடிக்கும் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில்,  ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாக உள்ளது.

அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, ஆகிய நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.

சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தொழில்நுட்பக் குழு

இயக்கம் – ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு – பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங் – அருள் மோசஸ்.A

இசை – ஷான் ரோல்டன்

கலை இயக்கம்- ராஜ் கமல்

உடை வடிவமைப்பு – நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட் – Action சந்தோஷ்

மக்கள் தொடர்பு – யுவராஜ்

 

Read Previous

ஜஸ்டிஸ் பார் ஜெனி – இசை வெளியீடு

Read Next

கிராண்ட்பாதர் – படப்பிடிப்பு நிறைவு

Most Popular