ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

விஷன் சினிமா ஹவுஸ்ஸின் ரிச் இந்தியா டாக்டர் D. அருளானந்து தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (30.10.2022) தொடங்கியது. இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை விஷன் சினிமா ஹவுஸ்ஸின் டாக்டர். டி. அருளானந்து தயாரித்து வருகிறார்.

‘மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். 

ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சார்லி, ’கோலமாவு கோகிலா’ படப்புகழ் அன்பு தாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், எருமசாணி யூடியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப்புகழ் ப்ரவீனா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
ஒளிப்பதிவு: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG விக்னேஷ்,
எடிட்டிங்: ‘கண்மணி அன்போடு காதலன்’ இணையத்தொடர் புகழ் KG வருண்,
கலை:  ’சத்யா’, ‘பீஸ்ட்’ படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த ABR,
இசை: ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்து குமார்.
 

Read Previous

படவேட்டு (மலையாளம்) – விமர்சனம்

Read Next

வெற்றிமாறன் திரைப்பட கல்லூரியில் சேர்க்கை ஆரம்பம்